இந்தியா

ஒரு வாரமாகத் தொடர்ந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே! 

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஒரு வாரமாகத் தான் தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை வியாழன் அன்று அன்னா ஹசாரே  நிறைவு செய்தார்.

DIN

புதுதில்லி: விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஒரு வாரமாகத் தான் தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை வியாழன் அன்று அன்னா ஹசாரே  நிறைவு செய்தார்.

நாட்டில் விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்காகச் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், தில்லி ராம் லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 23-ஆம் தேதி துவங்கினார்.

இந்த தொடர் உண்ணா விரத போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

வியாழனோடு 7-வது நாளாக உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் அன்னா ஹசாரேவை, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் ஆகிய இருவரும் சந்திதிப் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து தனது ஒருவார கால உண்ணா விரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே தற்பொழுது அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெகவினா் 10 போ் மீது வழக்கு

பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

தடை நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT