இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு ஆடை காரணமல்ல: நிர்மலா சீதாராமன்

Raghavendran

ஆடை தான் காரணம் எனில் குழந்தைகள், முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏன் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாலின பாகுபாடு தொடர்பான ஆய்வறிக்கை குறித்த ஃபிக்கி அமைப்பின் கருத்தரங்களில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணுக்கு தெரிந்த நபரே அவரை பாலியல் வன்கொடுமை செய்தால் அதை எவ்வாறு வெளி நபர்களால் தடுக்க முடியும். ஆடை காரணமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். நான் அவர்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். ஆடை தான் காரணமென்றால் முதியவர்களுக்கும், குழைந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை ஏற்படுவது ஏன்? 

இதுபோன்று ஒவ்வொரு 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 7 சம்பவங்கள் அதில் பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களால் ஏற்படுத்தப்படுவதுதான். இவ்விவகாரத்தில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் பாகுபாடு பார்க்கப்படக்கூடாது. இதில் மாற வேண்டியது பெண்களின் ஆடையல்ல, ஆண்களின் மனநிலைதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT