FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருநங்கைகள் பான் அட்டை பெற பாலினத்துக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை: ஐ.டி.

திருநங்கைகள், பான் அட்டை பெற பாலினத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:


புது தில்லி: திருநங்கைகள், பான் அட்டை பெற பாலினத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் அட்டைக்கான விண்ணப்பத்தில், ஆண், பெண் மட்டும் அல்லாமல், திருநங்கை என்ற பாலினமும் இணைக்கப்பட்டது. நாட்டில் முதல் முறையாக ஏப்ரல் 10ம் தேதி இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பான் அட்டை பெற விரும்பும் அல்லது தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் பான் அட்டையில் பாலினத்தை மாற்ற விரும்பும் திருநங்கைகள், திருநங்கை என்ற பாலினத்துக்காக எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

NSDL அல்லது UTIITSL இணையதளங்களில் இருக்கும் விண்ணப்பங்கள் வாயிலாக திருநங்கைகள் புதிய பான் அட்டைக்கும், இருக்கும் பான் அட்டையின் பாலினத்தை மாற்றவும் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments