இந்தியா

காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் ஆதரவு எங்களிடம் உள்ளது: பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய எம்எல்ஏ-க்களின் ஆதரவு தங்களிடம் உள்ளதாக பாஜக முக்கியத் தலைவர் ஈஸ்வரப்பா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Raghavendran

காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய எம்எல்ஏ-க்களின் ஆதரவு தங்களிடம் உள்ளதாக பாஜக முக்கியத் தலைவர் ஈஸ்வரப்பா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்களின் ஆதரவு தங்களிடம் இருப்பதாக பாஜக முக்கியத் தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணியை அக்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் பாஜக-வுக்கு தங்களின் ஆதரவை அளிக்க முன்வந்துள்ளனர். எனவே காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் பலரின் ஆதரவு எங்களிடம் உள்ளது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைவது 100 சதவீதம் உறுதி என்றார்.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்று வரும் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏ-க்களின் கூட்டத்தில் மஜத எம்எல்ஏ-க்கள் 2 பேர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 8 பேர் பங்கேற்காத சூழலில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT