இந்தியா

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கேஆர் ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

கர்நாடகாவில் பல இழுபறிக்கு பின்னர் குமாரசாமி கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு தொடர்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, பாஜக சார்பாக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் குமார் நேற்று சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத்தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் கேஆர் ரமேஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் குமார் தற்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இவர், ஏற்கனவே 1994-99 ஆண்டு சபாநாயகராக இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். அவருக்கு, காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சை என 115 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT