இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கோயில் மேலாளருக்கு அடி உதை
ஹர்யாணாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கோயில் மேலாளரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து தாக்கினர்.
ஹர்யாணா, யமுனாநகர் சிட்டியில் ஷானி மந்திர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அதே கோயிலின் கமிட்டி மேலாளர் அந்த இளம்பெண் திருடியதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், "நான் கோயில் சாவியை திருடியதாக கூறி அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்" என்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகத்தினரை மீறி அந்த மேலாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.