இந்தியா

இன்று மாலை சபரிமலை நடை திறப்பு: எருமேலியில் பக்தர்கள் போராட்டம்

மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவிருக்கும் நிலையில், சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

PTI


மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவிருக்கும் நிலையில், சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை இருமுடி கட்டி எருமேலி வந்த பக்தர்கள் யாரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பம்பை மற்றும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐயப்பன் பாடல்களைப் பாடியும், கோஷங்களை எழுப்பியும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், நேற்று மாலை முதல் நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம். முதலில் இன்று காலை 6 மணியளவில் அனுமதிப்போம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது 12 மணியாகும் என்று கூறுகிறார்கள். எங்களை உடனடியாக பம்பை செல்ல அனுமதிக்குமாறு கோஷம் எழுப்பி வருகிறோம் என்றனர்.

தனியார் பேருந்துகள் உள்ளே நுழைய அனுமதியில்லை என்றால், மாநில  அரசின் பேருந்தைக் கொண்டு வந்து எங்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT