இந்தியா

உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையைப் பெறும் இந்தியா

DIN

மும்பை: உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

அதிலும், அதிக பெண் விமானிகள் என்ற அளவோடு இல்லாமல், உலகில் அதிக பெண் விமானிகளின் சராசரி அளவை விட இந்தியாவில் இரண்டு மடங்கு அதிகமான பெண் விமானிகள் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

உலகில் உள்ள மொத்த விமானிகளில் பெண்களின் சதவீதம் 5.4%. ஆனால் இதுவே இந்தியாவில் ஒட்டுமொத்த விமானிகளில் பெண் விமானிகளின் சதவீதம் 12.4% ஆக உள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண் விமானிகள். இவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர்.

உலக அளவில் என்று எடுத்துக் கொண்டால் சுமார் 1.5 லட்சம் விமானிகள் உள்ளனர். இவர்களில் 8,061 பேர் பெண்கள், இவர்களில் 2,190 பேர் கேப்டன்களாக உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT