இந்தியா

தனியொரு ஆளாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி: சீதாராம் யெச்சூரி கருத்து

PTI


புது தில்லி: பணமதிப்பிழப்பு நீக்கம் என்ற நடவடிக்கையின் மூலம் தனியொரு ஆளாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் 2ம் ஆண்டு நிறைவு தினம் என்பதால், சீதாராம் யெச்சூரி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் காரணமாக இந்திய பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சீரழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். 

மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையினால் கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறினார்கள். ஆனால் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி மௌனமாக இருக்கிறார். உண்மை என்னவென்றால், மோடி தனி நபராக, இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கிவிட்டார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT