இந்தியா

நாளை மாலை கரையை கடக்கிறது கஜா புயல்: இந்திய வானிலை மையம் தகவல்

DIN

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் இன்று மாலை 5.30 மணி அளிவில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 540 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 640 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.  

மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல், காலை 5.30 மணி நிலவரப்படி 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் நாளை மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT