இந்தியா

எனது பிரச்னையை சரி செய்யுங்கள் அல்லது வாக்குரிமையை நீக்குங்கள்: தெலங்கானாவில் பெண் போராட்டம்

Donita Jose


ஹைதராபாத்: கைவிட்டுச் சென்ற கணவரின் சொத்தில் உரிமை பெற்றுத் தாருங்கள் இல்லையென்றால் எனது வாக்குரிமையை நீக்கிவிடுங்கள் என்று தெலங்கானாவில் ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது பிள்ளைகளையும், தன்னையும் ஒதுக்கிவைத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழும் கணவரின் சொத்துக்களில் பங்கு பெற்றுத் தர வேண்டும் என்றும், ஜீவனாம்சம் வழங்கக் கோரியும் கடந்த இரண்டு நாட்களாக ஸ்வரூபா ராணி என்ற பெண் கணவரின் வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். பிறகு என்னையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். எனது குடும்பத்தார் உதவியோடு பிள்ளைகளை வளர்த்தேன். இனியும் கஷ்டப்பட முடியவில்லை. அவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும். சொத்தில் பங்கு வேண்டும். தொகுதி எம்எல்ஏவிடமும் இது குறித்து உதவி கோரினோம். எந்த உதவியும் கிடைக்கவில்லை. அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில் என்றும் அவர் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT