கரோல் பாக் ஆலையில் தீ: அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் பலி
மத்திய தில்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று நேரிட்ட தீ விபத்தின் போது அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் தீயில் கருகி பலியாகினர்.
புது தில்லி: மத்திய தில்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று நேரிட்ட தீ விபத்தின் போது அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் தீயில் கருகி பலியாகினர்.
கரோல் பாக்கின் பிடோன்புரா பகுதியில் உள்ள துணிகளை துவைக்கும் தொழிற்சாலையில் இன்று மதியம் 12.23 மணியளவில் தீப்பற்றியது.
இதில், துணிகளைத் துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
அப்போது, அவசர கால வழியில் பருமனான நபர் வெளியேற முயன்ற போது அவர் அதில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரும் வேளியேற முடியாமல், கட்டடத்துக்குள் இருந்தவர்களும் வெளியேற முடியாமல் 4 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.