நாட்டு மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்தது ஏன்? தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு
நாட்டில் வேர்விட்டுப் பரவியிருந்த ஊழலை ஒழிக்கவே நாட்டு மக்களுக்கு பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தைக் கொடுத்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜபுவா: நாட்டில் வேர்விட்டுப் பரவியிருந்த ஊழலை ஒழிக்கவே நாட்டு மக்களுக்கு பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தைக் கொடுத்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கறையான்களை வேறோடு அழிக்க பூச்சி மருந்தைப் பயன்படுத்துவதில்லையா? அதுபோலவே நாட்டில் பரவியிருந்த ஊழலை ஒழிக்க நாட்டு மக்களுக்கு கசப்பு மருந்து அளிக்கப்பட்டது.
தங்கள் கட்டிலிலும், வீட்டிலும், நிறுவனத்திலும், தொழிற்சாலையிலும் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் தற்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி கட்டி வருகிறார்கள். வரிப்பணத்தை சாதாரண மக்களுக்கான திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிட்ட வருகிறது என்று கூறினார்.