இந்தியா

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி 

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை காலை நடந்த சாலை விபத்தில்,  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

IANS

போபால்: மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை காலை நடந்த சாலை விபத்தில்,  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

தேசிய நெடுஞ்சாலை எண் 26-ல் புதன்கிழமையன்று உத்தரப் பிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் இருந்து மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை நோக்கி சொகுசுக் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

இந்த காரானது சாகர் மாவட்டத்தை நெருங்கிய போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த ட்ரக் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சொகுசுக் காரில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலயே மரணமடைந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.     

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT