முகப்பு
இந்தியா

வரதட்சணைக்கான சண்டையில் எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை அறுத்து கணவன் கொடூரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணைக்கான சண்டையில் தன்னை எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை கணவன் அறுத்துள்ள கொடூர சம்பவம்

Updated On : 22 நவம்பர், 2018 at 12:03 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:11 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணைக்கான சண்டையில் தன்னை எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை கணவன் அறுத்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வரதட்சணை கொடுமைகளை களைவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், நாட்டின் பல பகுதிகளிலும் வரதட்சணை வறுமையின் கொடுமை தொடர்ந்து வளர்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆகாஷ் ஒரு பெருந்தொகையை செலவிட்டதாவும், அந்த செலவு தொகையை வரதட்சணையாக கேட்டு தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார். வரதட்சணை கேட்டு பலமுறை வழக்கான தொந்தரவுகளும் கொடுத்து வந்தநிலையில், மிருகத்தனமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சம்பவங்களும் நிகழந்துள்ளன.  

Advertisement

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதியும் வரதட்சணை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியபோது கணவர் ஆகாஷை எதிர்த்து மனைவி பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், மனைவியின் நாக்கை அறுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பின்னர், அவரை உள்ளூர் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து தனது கொடூர செயல் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மனைவியை பத்து நாட்களாக தனியறையில் அடைத்துவைத்துள்ளார். 

ஒருவழியாக கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்து பெற்றோரிடம் சென்ற அந்தப் பெண், நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் எடுத்துக்கூறி, அவர்கள் உதவியுடன் ஆகாஷ் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், ஆகாஷின் தந்தை காவலர் என்பதால், அந்த பெண் அளித்த புகார்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். 

இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்ததை அடுத்து விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. 

இதையடுத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தில்லியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.