முகப்பு
இந்தியா

நிலநடுக்கம் தாக்கிய இந்தோனேசியாவில் சிறைச்சாலைகளைத் தகர்த்துத் தப்பிய கைதிகள்

கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில், சிறைகளில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி சுமார் ஆயிரத்து இருநூறு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக நீதித் துறை அறிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
சுனாமியால் சேதமடைந்த கட்டடங்கள், வாகனங்கள்.
பகிர்:


ஜகார்த்தா: கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில், சிறைகளில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி சுமார் ஆயிரத்து இருநூறு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக நீதித் துறை அறிவித்துள்ளது.

பலூ மற்றும் டோங்கலா உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் மிகப்பெரிய மூன்று சிறைச் சாலைகளில் இருந்து ஆயிரத்து இருநூறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே பலரும் சிறையில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்றும், இது சிறைக் கைதிகளின் வாழ்வா சாவா என்பது போன்ற விஷயம் என்றும் சிறைத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.