இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதம்:  பாகிஸ்தானுக்கு இந்தியா - ரஷியா கூட்டு எச்சரிக்கை 

DIN

புது தில்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  பாகிஸ்தானுக்கு, இந்தியா மற்றும் ரஷியா கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன. 

பாகிஸ்தான் தொடர்ந்து தனது மண்ணில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. அத்துடன் எல்லைப் பகுதி ஊடுருவல்கள் மற்றும் காவல்துறையினர் மீதான தாக்குதல்களையும் ஊக்குவித்து வருகிறது. 

இந்நிலையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு :  பாகிஸ்தானுக்கு, இந்தியா மற்றும் ரஷியா கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன. 

பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமீர் ரஷிய இடையிலான மாநாட்டை அடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு இரு நாடுகளும் கண்டனம் தெரிவிப்பதாகவும், பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைபாட்டை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கப்படும் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலான நடவடிக்கைக்கு எதிராக தீர்க்கமான பதிலடி தேவையெனவும் இருதரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT