துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் ராணுவ வீரர்களை அவமானப்படுத்தி விட்டனர்: மோடி
இந்திய எல்லையில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களை எதிர்க்கட்சியினர் அவமானப்படுத்திவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அஜ்மேர்: இந்திய எல்லையில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களை எதிர்க்கட்சியினர் அவமானப்படுத்திவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அஜ்மேரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, ராஜஸ்தான் மக்கள் தங்களது தேர்தல் பாணியை இந்த முறை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வழக்கத்தை இந்த முறை மாற்ற வேண்டும். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் ராஜஸ்தான் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.