இந்தியா

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் தனியார் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த முடியும்: ஜேட்லி

DIN

மொபைல் ஃபோன் மற்றும் வங்கிக் கணக்குகளில் முன்பை போலவே ஆதாரை இணைப்பதற்கு சட்டப்படி சாத்தியக்கூறுகள் உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை தெரிவித்தார். 

ஆதார் சட்டப்பிரிவு 57-இன் படி தனியார் நிறுவனங்கள் ஆதாரின் தனித்துவ அடையாள தகவல்களை பெறுவதற்கு அரசு சட்டரீதியிலோ அல்லது ஒப்பந்த முறையிலோ அனுமதிக்கலாம். 

இதற்கிடையே, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆதார் தகவல்களை பயன்படுத்தக்கூடாது என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதனால், ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பயன்படுத்த முடியாது என்ற நிலை உருவானது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் வங்கிகள் மற்றும் மொபைல் ஃபோன்கள் ஆதாரை இணைக்கலாம் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

ஆதார் தகவல்களை, தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் பயன்படுத்த முடியாது எனும் அனுமதியை மட்டுமே உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார். 

அதனால், ஆதார் தகவல்களை சட்டரீதியில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT