இந்தியா

உ.பி. ரயில் விபத்து: 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

DIN


உத்தரப் பிரதேசத்தில் 7 உயிர்களை பலிகொண்ட விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரே பரேலி அருகே நியூ ஃபரக்கா விரைவு ரயிலின் 8 பெட்டிகளும், என்ஜினும் புதன்கிழமை காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் இருவர் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் பாதையில் தவறான சிக்னல்கள் கொடுக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. எனவே, சிக்னல் இன்ஸ்பெக்டர், எலக்ட்ரிக்கல் சிக்னல் பராமரிப்பு அதிகாரி ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT