இந்தியா

அக்.28-ல் ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

தினமணி

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கிடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க, வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானுக்குப் பயணமாக உள்ளார்.
 இது குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே ஆண்டுதோறும் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மாநாடு, வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.
 அங்கு, உச்சி மாநாட்டில் உரையாற்றும் மோடி, அந்த நாட்டுப் பிரதமர் ஷின்úஸா அபேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகள், இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படும் அரசியல் சூழல், பிராந்திய மற்றும் பல்வேறு நாட்டுப் பிரச்னைகள் ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த உச்சிமாநாடானது, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை, பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும் 11 முறை சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT