இந்தியா

தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல்: மோடி, சந்திரசேகர ராவ் மீது கடும் தாக்கு

IANS


ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அதிலாபாத் மாவட்டம் பெயின்சா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு புதிய மாநிலம் என்ற தெலங்கானாவின் உண்மையான கனவு நிறைவேறாமல் தடுத்து கடந்த 5 ஆண்டு காலத்தை வீணடித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மாநிலத்தை லஞ்ச, லாவண்யம் நிறைந்த மாநிலமாக மாற்றிவிட்டதாக முதல்வர் சந்திரசேகர ராவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசிய ராகுல், அனைத்து பலன்களையும் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே அனுபவித்ததாகவும், விவசாயிகளின் தற்கொலை மற்றும் லஞ்ச, லாவண்யம் அற்ற தெலங்கானாவை காங்கிரஸால் மட்டுமே உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT