இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: ஆசியான் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேச்சு

தினமணி

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் அமைப்பின் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
அண்டை நாட்டில் (பாகிஸ்தானை குறிப்பிட்டார்) பயங்கரவாத குழுக்களின் முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், அந்த பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிக்கப்படுவதும் இந்தியாவின் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மிகவும் பொறுமையுடன் இந்தியா உள்ளது.
எனினும், அந்த பயங்கரவாத குழுக்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டது. எதிர்காலத்தில் இதேபோன்று மீண்டும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை எழும்பட்சத்தில், அந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா சிறிதும் தயங்காது.
பயங்கரவாதத்தை வெளிநாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதை இந்தியா கண்டிக்கிறது. பிற நாடுகளுக்கு எதிரான தங்களது மறைமுக போர்களுக்கு பயங்கரவாதிகளை தூண்டி விடுவதையும் இந்தியா கண்டிக்கிறது. இந்த பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்பதை பிற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது என்றார் நிர்மலா சீதாராமன்.
மாநாட்டின் இடையே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸை நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். ஆஸ்திரேலியா, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களையும் தனித்தனியே நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதேபோல், ரஷியா, சீனா, தாய்லாந்து, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களையும் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT