இந்தியா

ம.பி. தேர்தல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 42 பேர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு

தினமணி

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய பேரவையில் எம்எல்ஏக்களாக இருக்கும் 42 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதைய பேரவையில் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு 165 எம்எல்ஏக்களும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
 முன்னதாக, மாநிலத்தில் பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிரான அலைகள் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, நடப்பு பேரவையில் எம்எல்ஏக்களாக இருக்கும் 70-80 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது உறுதியில்லை என்று பாஜக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் எம்எல்ஏக்களை திரும்ப போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
 இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் கூறியதாவது:
 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிட சரியான காரணம் ஏதும் இன்றி வாய்ப்பளிக்காமல் இருக்கக் கூடாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் எண்ணுகிறார். முதல் கட்டமாக 71 வேட்பாளர்களின் பெயர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்களின் இறுதி பட்டியல் ஒப்புதலுக்காக கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
 மேலும், மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பலை வீசி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க போகிறோம் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT