இந்தியா

மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் அருண் ஜேட்லி ராஜிநாமா செய்யவேண்டும் - ராகுல் காந்தி

DIN

மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதன்படி, 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மகள் மெஹூல் சோக்ஸியின் நிறுவனத்திற்காக பணியாற்றினார். இதற்கிடையே மெஹூல் சோக்ஸி நாட்டை விட்டு தப்பித்துச் செல்ல அருண் ஜேட்லி அனுமதித்துள்ளார். அருண் ஜேட்லியின் மகள் 12******16 எனும் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த செய்தியை ஊடகம் மறைத்துவிட்டது. ஆனால், மக்கள் இதனை மறக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ராஜிநாமா செய்யவேண்டும் என்றார்.   

முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,000 கோடி மோசடி வழக்கில் மெஹூல் சோக்ஸி இந்தியாவில் இருந்து தப்பியோடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT