இந்தியா

அமிருதசரஸ்  ரயில் விபத்து: சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  

அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ANI

சண்டிகார்: அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைக் காண்பதற்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பலர், அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று, ராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங், சனிக்கிழமை விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதேசமயம் பிரதமர் மோடி உயிரிழந்ததோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளார்.  

இந்நிலையில் அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல்செய்யப்பட்டுள்ளது. 

குருகிராமம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் தகோரியா என்பவர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையோ அல்லது இதற்கென சிறப்பு விசாரணைக் குழு ஒன்றோ உருவாக்கப்பட வேண்டும்   

அதேநேரம் இந்த விபத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் முறையாக கணக்கிட்டு, வழங்க வேண்டிய இழப்பீட்டை உறுதி செய்யும் பொருட்டு ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கக் கூடிய நீதிபதிகளைக் கொண்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

இந்த கோர விபத்துக்கான காரணமாக அமைந்த அசட்டையான விஷயங்கள் குறித்து ஆராய்வதோடு, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்குமாறு அமிருதசரஸ் நகர்மன்ற மற்றும் காவல்துறைக்கு உத்தரவோ அல்லது வழிமுறைகளோ கொடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT