இந்தியா

சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு: காவல் ஆணையர் அறிக்கை   

DIN

திருவனந்தபுரம்: சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும் சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக, சிறப்பு காவல் ஆணையர் மனோஜ் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.  

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் நடந்தது. 

சபரிமலையில் நடந்த விஷ்யங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு சிறப்பு காவல் ஆணையராக மனோஜ் என்ற அதிகாரி கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும் சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக, சிறப்பு காவல் ஆணையர் மனோஜ் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலையில் நடந்த போராட்டங்கள் அடுத்த மாதம் துவங்க உள்ள சீசனிலும் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. 

போராட்டத்தில் ஈடுபட அதிக அளவில் குவியும் பக்கதர்களின் காரணமாக ஏற்படும் நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களால் அநேகம் பேர் உயிரிழப்பார்கள். 

தற்போது அங்கு ஒரு அசாதாரணமான சூழல் சூழல் நிலவி வருகிறது. 

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT