இந்தியா

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்

DIN


பாகிஸ்தான் உள்பட எந்த நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
ஜம்மு-காஷ்மீரில், பல்வேறு கட்சி பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் தெரிவித்ததாவது:
மக்களாட்சியின் மாண்பைக் காக்க, மாநிலத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில், அனைத்து கட்சிகளும் பங்குபெற வேண்டும். அப்போது தான், மக்களின் தேவைகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வுகள் சரியாகக் கிடைக்கும்.
பாகிஸ்தான் உள்பட எந்த நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது. அதற்கு முன்பாக, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்ற உத்தரவாதத்தை அந்நாடு அளிக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. 
குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் துரதிருஷ்டவசமானது. மனித உயிருக்குப் பணம் என்றும் சமமாக முடியாது. இருந்தபோதிலும், இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ராணுவ நடவடிக்கை நடைபெறும் இடங்களில், பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் மோதல்கள் மற்றும் கசப்புணர்வை நீக்க, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெஹபூபா முஃப்தி, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT