இந்தியா

ஜன்தன் வங்கிக் கணக்குகளில் வந்த பழைய ரூபாய்: தகவல் வெளியிட ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவு

DIN


கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தியபோது, ஜன்தன்' வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் குறித்த விவரங்களை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கிக்கு, மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை ரிசர்வ் வங்கி தர மறுத்ததாக, தகவல் அறியும் ஆர்வலர் சுபாஷ் அகர்வால் முறையீடு செய்ததையடுத்து இந்த உத்தரவை சிஐசி பிறப்பித்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத ஏழை, எளியோருக்கும் அந்த சேவையை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஜன்தன் என்று சொல்லக்கூடிய அனைவருக்கும் வங்கிக் கணக்கு' திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தியபோது, அந்த வங்கிக் கணக்குகளில் பணம் குவியத் தொடங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், ஜன்தன் மற்றும் அனைத்து சேமிப்பு, நடப்பு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய்களின் மொத்த தொகை, வங்கி அதிகாரிகளுக்கு எதிரான முறைகேடு புகார்கள் உள்ளிட்ட விவவரங்களை தெரிவிக்க கோரி, ரிசர்வ் வங்கியிடம் சுபாஷ் அகர்வால் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், ரிசர்வ் வங்கி தகவல் தர மறுத்ததால், சிஐசியிடம் அவர் முறையிட்டார். இதையடுத்து, ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என சிஐசி ஆணையர் சுதிர் பர்கவா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று அனைத்து சேமிப்பு, நடப்பு வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்ட பழைய ரூபாய்களின் மொத்த தொகை, ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கடைப்பிடிக்காத அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என சிஐசி அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை, கேட்கப்பட்ட தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லையெனில், அதுதொடர்பாக சிஐசிக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுதிர் பர்கவா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT