இந்தியா

காஷ்மீரில் மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 12 பேர் பலி  

காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் வெள்ளியன்று மினி பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர். 

IANS

ஜம்மு: காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் வெள்ளியன்று மினி பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர். 

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் வெள்ளியன்று காலை சுமார் 25 பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த பேருந்தானது தக்ரி பகுதி அருகே வந்து கொண்டிருந்த பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,  செனாப் நதியில் பாய்ந்தது. 

இந்த விபத்தில் 12 பயணிகள் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.  10 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் வேறு யாரேனும் சிக்கியுள்ளாரா என்று தேடும் பணிகள் தொடந்து நடந்து வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT