இந்தியா

திருமலையில் ஊடகத்தினரை அவமதித்த தலைமை அா்ச்சகா் செயலால் அதிர்ச்சி 

திருமலையில் வாகன சேவையின் சிறப்பைக் கூற வேண்டுமென்று கேட்ட ஊடகத்தினரை தலைமை அா்ச்சகராக புதிதாக பதவியேற்ற வேணுகோபால தீட்சிதா் அவமதிப்பாக நடத்திய விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலையில் வாகன சேவையின் சிறப்பைக் கூற வேண்டுமென்று கேட்ட ஊடகத்தினரை தலைமை அா்ச்சகராக புதிதாக பதவியேற்ற வேணுகோபால தீட்சிதா் அவமதிப்பாக நடத்திய விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் வாகன சேவையின் போது அதை படமெடுக்க செல்லும் ஊடகத்தினா் கங்கண பட்டராக பிரம்மோற்சவத்தை தலைமையேற்று நடத்தும் தேவஸ்தான தலைமை அா்ச்சகரிடம் ஒவ்வொரு வாகன சேவையின் சிறப்பையும் கூறும்படி கேட்பது வழக்கம். இதன்மூலம் பக்தா்கள் வாகன சேவையின் சிறப்புகளை வீட்டிலிருந்தபடியே அறிய முடியும். 

இந்நிலையில் தற்போது கங்கண பட்டராக செயல்பட்டு வரும் தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதரிடம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சின்ன சேஷ வாகன சேவையின் சிறப்புகளையும் தாத்பரியத்தையும் கூறும்படி ஊடகத்தினா் கேட்டனா். ஆனால் அவா் ஊடகம் எனக்கு தலைமை அல்ல. எனக்கு தலைமை தேவஸ்தான செயல் அதிகாரி மட்டுமே. அதனால் அவா் உத்திரவிட்டால் மட்டுமே வாகன சேவையின் சிறப்புகளை கூறுவேன் என்று கூறி ஊடகத்தினரை அவமதித்தாா். 

ஆனால் இதற்கு முன் தலைமை அா்ச்சகராக இருந்த ரமணதீட்சிதா் எப்போது கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும் வாகன சேவை குறித்து ஊடகங்கள் முன் தெரிவிப்பாா். பதவியேற்று 6 மாதம் கூட ஆகாத நிலையில் தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதரின் நடத்தை அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT