இந்தியா

கேரளத்தில் நிவாரண பணிகள் முடக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினமணி

கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று விட்டதால் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் முடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எம்.ஹாசன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கடந்த 2-ஆம் தேதி சென்றார். அதன்பிறகு, நிர்வாகப் பணிகள் முடங்கிவிட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு உதவித்தொகை ரூ.10,000 உடனடியாக வழங்கப்படவில்லை. இந்த உதவித் தொகை 48 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் என்று மாநில அரசு உறுதி அளித்திருந்தது என்றார் ஹாசன்.
 இதுவரை, "5.70 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரை உடனடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,236 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது' என்று கேரள அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT