முகப்பு
இந்தியா

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 20 எம்எல்ஏக்களில் 4வது இடம் பிடித்தத் தமிழர்

அதிக வருமானம் பெறும் எம்எல்ஏக்களில் தமிழக எம்எல்ஏ ஒருவர் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Updated On : 18 செப்டம்பர், 2018 at 5:27 PM
பகிர்:


சென்னை: வசந்த்அன்ட்கோ நிர்வாகியும், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான வசந்தகுமார் அதிக வருமானம் பெறும் எம்எல்ஏக்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களின் வருமானம், சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை லாபநோக்கற்ற அமைப்பான ஏடிஆர் நேற்று வெளியிட்டது.

அதில், தெரிய வந்திருக்கும் தகவலின் அடிப்படையில், இந்திய அளவில் அதிக ஆண்டு வருமானம் ஈட்டும் 20 எம்எல்ஏக்களின் பட்டியலில் 66 வயதாகும் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார்.

Advertisement

அவரது வருமானம் ரூ.24.64 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். இவர்தான் வசந்த் அண்ட் கோ நிறுவனர் என்பதும், வசந்த் அண்ட் கோ மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடட்டின் பொது மேலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக எம்எல்ஏ பி.வி. பாரதி (57) மிகக் குறைந்த வருமானம் பெறும் எம்எல்ஏவாக உள்ளார். இவரது ஆண்டு வருமானம் ரூ.60,709 மட்டுமே. நாட்டிலேயே மிகக் குறைந்த வருமானம் பெறும் எம்எல்ஏக்களின் பட்டியலில் 18வது இடத்தில் பாரதி உள்ளார். 

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில், 2016ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 33 பேர் தங்களது வருமான வரிக் கணக்குக் குறித்து தகவலைப் பதிவே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.