இந்தியா

இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் திடீர் ராஜிநாமா

DIN


இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா அப்தாலி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
தில்லிக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கடந்த புதன்கிழமை சுற்றுப்பயணமாக வந்திருந்தார். அப்போது தனது ராஜிநாமா கடிதத்தை கானியிடம் அப்தாலி அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அப்தாலி, ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் திரும்பி, நாட்டு மக்களின் வளர்ச்சி, அமைதி, சர்வதேச ஒற்றுமை ஆகியவற்றுக்காக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில், இந்தியாவில் எனது நாட்டுக்காக சேவையாற்றுகையில், எனது நாட்டுக்கு திரும்பி சென்று சேவை புரிய வேண்டிய அவசியம் குறித்து உணர்ந்தேன். இந்தியாவுக்கான தூதராக நான் பணிபுரிந்த காலத்தில், ஆப்கானிஸ்தான்-இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவு படிப்படியாக வலுவடைந்து வந்தது' எனத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக அப்தாலி 6 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT