இந்தியா

அரசின் திட்டங்களுக்கு பர்சன்டேஜ் கமிஷன் கலாச்சாரம்: நவீன் ஆட்சியை சாடும் பிரதமர் மோடி

PTI


ஜர்சுகுடா: அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு பர்சன்டேஜ் கமிஷன் கலாச்சாரத்தை பின்பற்றுவதால், மாநிலத்தின் வளர்ச்சியில் மெத்தனம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா பகுதியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, மத்திய அரசு செயல்படுத்தும் எந்த நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அது கழிவறையாகட்டும் அல்லது வேளாண் உதவியாகட்டும் லஞ்சம் பெற்றுக் கொள்ளாமல் மக்களைச் சென்றடைய ஒடிசாவை ஆளும் பிஜேடி அரசு அனுமதிப்பதில்லை.

லஞ்சமும், திட்டங்களை முடிவு செய்வதில் ஏற்படும் தாமதமுமே ஒடிசா அரசின் தாரக மந்திரமாக இருப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT