இந்தியா

இந்தியாவை நேசிக்கிறேன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

DIN


இந்தியாவை நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார். இந்நிலையில், நியூயார்க்கில் போதை பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது உரையை முடித்து விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கினார். அவரிடம் சுஷ்மா ஸ்வராஜை ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் புன்னகைத்து பேசிக் கொண்டனர்.
அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாக டிரம்பிடம் சுஷ்மா கூறினார். 
இதைக்கேட்டுவிட்டு டிரம்ப் பதிலளிக்கையில், இந்தியாவை நேசிக்கிறேன்; எனது வாழ்த்துகளை எனது நண்பர் மோடியிடம் தெரிவியுங்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT