இந்தியா

எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குரைஞர் பணியை தொடரலாம்: உச்ச நீதிமன்றம்

DIN


நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ), சட்டமேலவை உறுப்பினர் (எம்எல்சி) ஆகியோர் பதவியில் இருக்கும்போது நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
அவர்கள் வழக்குரைஞர் பணியை தொடருவதை பார் கவுன்சில் தடை செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பான மனு மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி விசாரணை நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பாஜக நிர்வாகியும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர், எம்எல்ஏ மற்றும் எம்எல்சி ஆகிய மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்றங்களில் வழக்குரைஞர் பணியை மேற்கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு வழக்காடுவது, அரசமைப்புச் சட்டப்பிரிவு 14-க்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏôரளமான மக்கள் பிரதிநிதிகள், அரசுக் கருவூலத்தில் இருந்து ஊதியம் மற்றும் பிற சலுகைகளை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் வழக்குரைஞராகவும் பணியாற்றுகின்றனர் என்பதை நீதித்துறையும், நாடளுமன்ற அமைப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மனுதாரர் கூறியிருந்தார்.
அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் சார்பில் வழக்குரைஞர் சேகர் நாபாதே ஆஜராகி வாதாடினார். அரசுக் கருவூலத்தில் இருந்து ஊதியம் பெறும் மக்கள் பிரதிநிதிகளும், பிற ஊதியதாரர்களும் வழக்குரைஞராக பணியாற்ற பார் கவுன்சில் தடை விதித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர், எம்எல்ஏ மற்றும் எம்எல்சி ஆகியோர் மக்கள் பிரதிநிகள் தானே தவிர, அவர்கள் அரசின் முழுநேர ஊழியர்கள் அல்ல என்றும், எனவே, இதுதொடர்பான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் மத்திய அரசு வாதாடியது.
அதேபோல், வேலை அமைப்பு என்பது முதலாளி - தொழிலாளி என்ற உறவு முறையிலானது. அப்படி பார்க்கும்போது நாடாளுமன்றம் என்பது எம்.பி.க்களுக்கான முதலாளியாக செயல்பட முடியாது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்தச் சூழலில், அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT