இந்தியா

அரசுப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை: உச்ச நீதிமன்றம்

DIN


புது தில்லி: அரசுப் பணியில் பதவி உயர்வின் போது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்களைக் கேட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதில், அரசுப் பணியில் சேர்க்கையின் போது எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசுப் பணியில் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டியது இல்லை. தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT