இந்தியா

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணமும் மனவேதனையை ஏற்படுத்துகிறது: ராஜ்நாத் சிங் வருத்தம்

DIN

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணச் செய்தியும் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார்.

லக்னோவில் பாஜக பொதுக்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ராணுவ வீரர்கள் நம் நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஒவ்வொரு முறை ராணுவ வீரர்கள் கொல்லப்படும்போதும் எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்துகிறது. எனது வேதனை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும் போதும் இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

முன்னதாக, செப். 18-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ராம்கார் எல்லைப் பகுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காணாமல் போன எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதேபோன்று நரேந்திர சிங் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரரும் கடந்த மாதம் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT