இந்தியா

கேரள மறுகட்டமைப்புக்கு சிறப்பு வரி: ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு 

DIN

புது தில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார். 

தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கு கொண்ட 30-ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட கிழக்கு, மலைப்பகுதி மற்றும் கடற்கரையோர மாநிலங்களின் அமைச்சர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இந்தக் குழுவானது ஒரு சில வாரங்களில் தளது பரிந்துரையினை அளிக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT