இந்தியா

சந்திரபாபு அல்ல..யூ டர்ன் பாபு: ஆந்திர முதல்வரை விமர்சித்த மோடி 

சந்திரபாபு அல்ல..யூ டர்ன் பாபு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

IANS

ராஜமுந்திரி: சந்திரபாபு அல்ல..யூ டர்ன் பாபு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ஆந்திராவின் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

இந்நிலையில் சந்திரபாபு அல்ல..யூ டர்ன் பாபு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்துரியில் திங்களன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இணையக் குற்றங்கள் தொடர்பான சேவைகளுக்காக 'சேவா மித்ரா' என்னும் புதிய செயலி  ஒன்றை  தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் துவக்கி உள்ளதாக அறிந்தேன். அதில் எந்த சேவையும்  (சேவா) இல்லை; நட்பும் (மித்ரா) இல்லை. பதிலாக அது பொதுமக்களின் தகவல்களைத் திருடுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள்; தற்போது என்ன பேசுகிறார் என்பதையும் பாருங்கள். அவர் கூறியது எதையும் நிறைவேற்றவில்லை ஆனால் மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருக்கிறார். இத்தகைய  தலைவர்களை மக்கள் நம்பக் கூடாது.   அவரை 'யூ டர்ன் பாபு' என்றே அழைக்கலாம்.

பாஜக ஆந்திராவின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற விரும்புகிறது. ஆனால் யூ டர்ன் பாபுவுக்கோ அவரது ஹெரிட்டேஜ் (பாரம்பரியம் என்னும் பொருளில் அமைந்த சந்திரபாபுவின் குடும்ப நிறுவனப் பெயர்) பற்றி மட்டுமே கவலை.

நேர்மை , கொடுத்த வாக்கை காப்பாற்றுவது மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை ஆந்திராவின் பண்பாடு. ஆனால் நேர்மையின்மை, ஏமாற்றும் தன்மை மற்றும் ஊழல் ஆகியவையே யூ டர்ன் பாபுவின் பண்பாடு.

யூ டர்ன் பாபுவின் அரசானது பொல்லவரம் திட்டத்தை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. அனால் எங்களது அரசு நாட்டு நலனுக்காக எத்தனையோ திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT