இந்தியா

செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை  

DIN

லக்னௌ: உத்தரபிரதேசத்தில் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்களை மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களுடைய தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த 493 வேட்பாளர்கள் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

இதன் காரணமாக அவர்கள் அனைவரையும் மூன்று ஆண்டுகள் தேர்தல் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

குறிப்பாக முசாபர்நகர் மாவட்டத்தில் மட்டும் 6 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரமேஷ் சந்த் ராய் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT