ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோஃபியான் மாவட்டத்தின் பர்குசி கிராமத்தின் ஆர்சர்ட் எனுமிடத்தில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.