இந்தியா

தேர்தல் வாக்குறுதி அட்டைப் படத்திலேயே காங்கிரஸ், பாஜக இடையிலான வேறுபாடு தெரியும்: அகமது படேல்

ANI

காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் வாக்குறுதி அதன் அட்டைப் படத்திலேயே தெரியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விமர்சித்துள்ளார். 

2019 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வாக்குறுதி திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறியதாவது:

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் வாக்குறுதிக்கான வேறுபாடு அதன் அட்டைப் படத்திலேயே தெரியும். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அட்டைப் படம் மக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் காங்கிரஸின் வாக்குறுதி மக்களுக்கானது. அதுவே பாஜக அட்டைப் படத்தில் பிரதமர் மோடி இடம்பிடித்திருப்பார். ஏனென்றால் அதுதான் பாஜக-வின் திட்டம்.

காங்கிரஸ் கட்சியினுடையது நியாயமான (நியாய்) திட்டம். பாஜக தேர்தல் வாக்குறுதி பொய்களால் நிரம்பியது என்றார்.

இனியும் இந்த நாடு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை நம்பாது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு ஒரு மதிப்பெண் கூட வழங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT