இந்தியா

 நீங்கள் பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும்..: முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்

நீங்கள் பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நேரடியாக எனக்கு வந்து சேருவதாகும் என்று முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

IANS

லத்தூர்: நீங்கள் பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நேரடியாக எனக்கு வந்து சேருவதாகும் என்று முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்திலுள்ள அவுசா என்னும் இடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டில் பிறந்து தற்போது இளம் பருவத்தை எட்டியுள்ள இந்த தலைமுறையினைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்பம், சுற்றியுள்ள மக்கள்  மற்றும் இந்த தேசத்திலிருந்து நிறைய பெற்றுள்ளனர்.

எனவே அவற்றை திருப்பி அளிப்பதற்கு இதுவே சரியான தருணம். உங்களது முதல் ஓட்டானது புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்காக, ஏழை மக்கள் வீடு பெறுவதற்காக, விவசாயிகளுக்கு  நீர் கிடைப்பதற்காக மற்றும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் நமது நாட்டிற்காகவும் வலிமையான அரசுக்காகவும் வாக்களிக்க வேண்டும்,

நீங்கள் பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நேரடியாக எனக்கு வந்து சேருவதாகும்.

எனவே தேச நலுனுக்காக வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT