முகப்பு
இந்தியா

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

பிரிவினைவாத தலைவா் யாசின் மாலிக்கை விசாரணை செய்வதற்காக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மூலம் என்ஐஏ அமைப்பு அவரை காவலில் எடுத்தது. 

Updated On : 10 ஏப்ரல், 2019 at 7:24 PM
பகிர்:

2017-ஆம் ஆண்டு பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரங்களை கண்டறிவதற்காக, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவா்களான ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக், சையது அலி ஷா கிலானி உள்பட பலரை என்ஐஏ விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில் பிரிவினைவாத தலைவா் யாசின் மாலிக்கை விசாரணை செய்வதற்காக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மூலம் என்ஐஏ அமைப்பு அவரை காவலில் எடுத்தது. 

இந்நிலையில், தில்லி நீதிமன்றத்தில் வைத்து யாசின் மாலிக்கை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். பின்னர் சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் முன்பு அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, யாசின் மாலிக்கை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது. 

Advertisement

எனவே, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி(ஜேகேஎல்எஃப்) கட்சியின் தலைவா் யாசின் மாலிக்கை, ஏப் 22-ஆம் தேதி வரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க தில்லி நீதிமன்றறம் அனுமதியளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.