இந்தியா

திரிணமூல் காங்கிரசுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம்?: அறிக்கை கோரும் மத்திய அரசு 

திரிணமூல் காங்கிரசுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.

DIN

புது தில்லி: திரிணமூல் காங்கிரசுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.

நாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிற மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கென்கையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக, இந்தியா -வங்கதேச எல்லையில் உள்ள ஹெம்தாபாத், காரான்திகாய் பகுதிகளில் வங்கதேச நடிகர் பெர்தோஸ் அகமது பிரசாரம் மேற்கொண்டார் என தகவல் தெரிய வந்துள்ளது.

அவர்  பிரசாரம் செய்த விவகாரத்தில் விசா நடைமுறைகளை பெர்தோஸ் அகமது மீறியுள்ளாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு என கொல்கத்தா வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT