இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜகவில் இணைந்தார்: போபாலில் போட்டி?

DIN


மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிராக்யா தாகுர் பாஜகவில் இணைந்தார். இவர் போபால் தொகுதியில் திக் விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிராக்யா, போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

போபால் உட்பட இன்னமும் அறிவிக்கப்படாத மேலும் 4 தொகுதிகளுக்குமான பாஜக வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் மசூதி ஒன்றின் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டசாத்வி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

ஆந்திரப் பேரவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் முன்னிலை

தமிழக பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் தொடர் பின்னடைவு!

SCROLL FOR NEXT