இந்தியா

மக்களவைத் தேர்தலுக்குப் பின் மாநில ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம்: எடியூரப்பா

DIN

மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இந்த ஆட்சிக்கு தரும் ஆதரவை திரும்பப்பெறும் சூழல் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:

கர்நாடகத்தில் வெறும் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டாலும், தேவெ கௌடா பிரதமராக விரும்புகிறார். இல்லையென்றால் அரசியல் ஆலோசகராக வேண்டும் என்றாவது நினைக்கிறார். பாஜக மூத்த தலைவர் அத்வானி போன்று இல்லாமல், அரசியலில் இருந்து எப்போதும் விலகப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ராகுலுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பது மட்டும்தான் அவரது ஆசை.

ஆனால், அனைத்து தடைகளையும் தாண்டி 22 இடங்களுக்கும் மேல் பாஜக வெல்வது உறுதி. ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 104 இடங்களுடன் கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதேபோன்று நாடு முழுவதும் 300 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி.

தற்போதைய குமாரசாமி அரசு மீது காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த மக்களவைத் தேர்தலுக்கு பின் அவருக்கு ஆதரவு அளித்து வரும் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெறும் சூழல் உள்ளது. எனவே கர்நாடக அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT