இந்தியா

பிஜு ஜனதா தளம் வேட்பாளர் மரணம்

DIN

ஒடிஸாவின் பட்குரா பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மூத்த தலைவர் பெட் பிரகாஷ் அகர்வால், உடல் நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில், "சிறிது காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த பிரகாஷ் அகர்வால், புவனேசுவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சனிக்கிழமை காலை காலமானார்' என்றனர். அவருக்கு மனைவியும் இரு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். பிரகாஷ் அகர்வாலின் மறைவுக்கு, முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பட்நாயக் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "எனது தந்தை பிஜு பட்நாயக்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் பிரகாஷ் அகர்வால். அவரது ஆளுமையும், அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய துணைத் தலைவர் வைஜயந்த் பாண்டா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
6 முறை எம்எல்ஏவான பிரகாஷ் அகர்வால், தற்போது பட்குரா தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT